மேலும்

மற்றொரு கேந்திர நிலையை இழக்கப் போகிறது சிறிலங்கா இராணுவம் – அலறுகிறார் வசந்த பண்டார

இந்திய அரசாங்கத்தின் ஆணையின் பேரில், சிறிலங்கா விமானப்படை வசம் உள்ள பலாலி விமான நிலையத்தை, சிவில் விமான நிலையமாக்க முயற்சிகள் நடப்பதாகவும், அவ்வாறு மாற்றப்பட்டால், சிறிலங்கா இராணுவம் வடக்கில் மற்றொரு கேந்திர நிலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய அமைப்புகளின் ஒன்றியம் எச்சரித்துள்ளது.

மகிந்தவைப் பிரதமராக நியமிக்க வேண்டும்- என்கிறார் கோத்தா

நாட்டைக் காப்பாற்றுவதற்கு, சிறிலங்கா அதிபர் விரைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.

ஜோன் கெரியின் பயணம் முடியும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் பயணம் நிறைவடையும் வரை, நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று, சிறிலங்காவின் பிரதி நீதி அமைச்சர் சுஜீன செனசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்த – மைத்திரி சந்தித்துப் பேச இணக்கம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவும் நேரடியாகச் சந்தித்துப் பேச இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாமரைக் கோபுரம் கண்காணிப்பு அரண் அல்ல – இந்தியாவின் குற்றச்சாட்டை மறுக்கிறது சீனா

தற்போது கொழும்பில் நிர்மாணிக்கப்படும் தாமரைக் கோபுரத்தைப் பயன்படுத்தி சீனா, இந்தியா மீது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைவதாக இந்திய ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சீன ஒப்பந்தக்காரர்கள் நிராகரித்துள்ளனர்.

நாடு திரும்பினார் பசில் – கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் வெளியார் நுழையத் தடை

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக நாடு திரும்பியுள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரேணை கொண்டு வர முயற்சி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சியில், மகிந்த ராஜபக்ச ஆதரவு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றம் 27ம் நாள் வரை ஒத்திவைப்பு – மகிந்த ஆதரவாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா நாடாளுமன்றக் கூட்டமும் வரும் 27ம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்குள் மதுபானம் அருந்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்? – சபையில் குழப்பம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து சபை நடவடிக்கைகள், சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், மகிந்த ராஜபக்சவுக்கு ஆரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நடவடிக்கையைத் தொடர விடாமல் போராட்டம் நடத்தினர்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ள மகிந்த ஆதரவாளர்கள்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும், சிறிலங்கா நாடாளுமன்ற வளாகப் பகுதியி்ல் பெரியளவிலான எதிர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது.