மேலும்

சிறிலங்கா அமைச்சர் குத்துக்கரணம் – அமெரிக்க தூதுவர் சலுகைகளை வழங்க முன்வரவில்லையாம்

அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுவதற்கு, அமெரிக்கத் தூதுவராக இருந்த மிச்சேல் ஜே சிசன் தனக்கு இலஞ்சம் தர முயற்சிக்கவில்லை என்று, குத்துக்கரணம் அடித்துள்ளார், சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன்.

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களுக்குத் தடைபோட்ட வேட்பாளர்கள்

அடுத்தமாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களை அழைப்பதற்கு இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நால்வர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா அறிக்கை கிலியில் சிறிலங்கா – இப்போதே சட்டவல்லுனர்களைத் தயார்படுத்துகிறது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள சிறிலங்கா குறித்த அறிக்கையை எதிர்கொள்வது குறித்து உலகிலுள்ள மிகப் பிரபலமான சட்டவல்லுனர்களுடன் சிறிலங்கா தொடர்பு கொண்டுள்ளது.

சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்துக்கு பிரித்தானியா ஆதரவு – இரகசிய ஆய்வையடுத்து முடிவு

சிறிலங்காவில் ஆட்சிமாற்ற ஏற்படுவதற்கு பிரித்தானியாவின் ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவை விட்டு வெளியேறி பிரித்தானியாவில் தஞ்சமடைந்தார் ஹிருணிகா

அண்மையில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர, சிறிலங்காவை விட்டு வெளியேறி, பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

அனைத்துலக ஆலோசனைக்குழுவுக்கு ஜப்பானிய நிபுணர் நியமனம்

வடக்கு, கிழக்கில் போர் இடம்பெற்ற காலத்தில் காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவுக்கு ஜப்பானிய நிபுணர் ஒருவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா : ‘அதிபர் ராஜபக்சவும் அவரது அதிகாரம் மிக்க சகோதரர்களும் பதவியை விட்டு வெளியேறுவதில் எதிர்ப்பைக் காண்பிப்பார்கள்’

தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது சக்திமிக்க சகோதரர்களும் ஆட்சி அதிகாரத்தை விட்டு வெளியேறுவதில் எதிர்ப்பைக் காண்பிக்கலாம் என்கின்ற அச்சம் அதிகரித்து வருவதாக அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் சிறிலங்காவுக்கான ஆய்வாளர் அலன் கீன் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

810 இணையத்தளங்களை குறிவைக்கிறது சிறிலங்கா?

வெளிநாடுகளில் இருந்து செயற்படும் – சிறிலங்கா குறித்த செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களை அடையாளம் காணும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மனித உரிமைகள் கடப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் – அனைத்துலக மன்னிப்புச் சபை

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தலை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து ஆய்வு நடத்த இந்திய அரசு முடிவு

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை அவர்களின் தாயகத்துக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொள்ள இந்திய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.