மேலும்

பிரிவு: மொழிபெயர்ப்புகள்

இந்தியச் சந்தையை முறியடிக்க சீனா கால்வைக்க வேண்டிய இடம் சிறிலங்கா

சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட துறைமுகத் திட்டத்தை மீளவும் புதுப்பிப்பதற்கு உதவி கோரியுள்ளதானது, இந்நாட்டின் முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சீனா அதிகளவு செல்வாக்குச் செலுத்தியதற்கான ஒரு குறியீடாகக் காணப்படுகிறது.

போர்க்குற்ற விசாரணையை தட்டிக்கழித்து, உண்மை, நல்லிணக்கம் மீது கவனம் செலுத்தும் சிறிலங்கா

சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட மக்கள் உண்மை மற்றும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒவ்வொரு படிமுறையிலும் அவர்களுக்கு இதயசுத்தியுடன் ஆலோசனை வழங்கப்படுகிறதா என்பதை சிறிலங்கா அதிகாரிகளும் அனைத்துலக சமூகமும் உறுதி செய்யவேண்டும்.

காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்கு அத்தாட்சிப் பத்திரங்கள்

போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் காணாமற்போனோர் விவகாரம் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக போரின் இறுதிக்கட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பாக தற்போது பல்வேறு அழுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா அரசுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்காவின் நகர்வு – உபுல் ஜோசப் பெர்னான்டோ

மனித உரிமைகள் பேரவைக்கு ஐ.தே.க விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதாகவும் இதனால் சிறிலங்கா அதிபரும் அவரது அரசாங்கமும் தர்மசங்கட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் மைத்திரிக்கு ஆதரவான குழுவினர் கருதுகின்றனர்.

புதிய நீதிப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்படாவிட்டால்….?

சிறிலங்காவின் புதிய நீதிப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காத்திரம்மிக்க பங்களிப்பு உறுதி செய்யப்படத் தவறினால், சிறிலங்காவின் வன்முறைக் கலாசாரம் மேலும் பலம்பெறுவதுடன் சமாதானம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கான நகர்வுகளும் பாதிக்கப்படும்.

ஜெனிவா தீர்மானம் – மீளிணக்கப்பாட்டின் தொடக்கப் புள்ளியாகுமா?

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் மனித உரிமைகளை உறுதி செய்வதற்கான புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதால் கொழும்புடன் தனது உறவைப் புதுப்பித்துக் கொள்வதில் அமெரிக்கா அதிக ஆர்வம் காண்பிக்கிறது. இதனாலேயே சிறிலங்காவுடனான தனது கடும்போக்கான நிலைப்பாட்டைக் கைவிட்டுள்ளது.

ஐ.நா தீர்மானம் சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காமல் போகலாம்

அனைத்துலக விசாரணையின் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும் அமெரிக்கா  வலியுறுத்தியது. ஆனால் தற்போது அமெரிக்கா தனது இந்த நிலைப்பாட்டிலிருந்து சடுதியாக மாறியுள்ளது.

சிறிலங்காவின் நீதித்துறை மீது ஐ.நா மனித உரிமை ஆணையம் நம்பிக்கை கொள்ளாதது ஏன்?

நாட்டின் நீதிமுறைமையில் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்கான மிகப் பாரிய செயற்பாட்டை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது.  இவ்வாறானதொரு சூழல் சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்திலும் ஏற்பட்டது.

சிறிலங்கா போரின் மீது புதிய விசாரணைகளைத் தூண்டும் ஐ.நா அறிக்கை – பாகம் 2

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மீறல்களை நேரில் பார்த்த மக்களைப் பொறுத்தளவில் சிறிலங்காவின் அரசியல் மாற்றமானது சிறிதளவான நம்பிக்கையையே கொடுத்துள்ளது. போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தாம் சந்தித்த இழப்புக்களைச் செவிமடுப்பதற்கு நடுநிலையான ஒரு பொறிமுறையை மட்டுமே விரும்புகின்றனர்.

சிறிலங்கா போரின் மீது புதிய விசாரணைகளைத் தூண்டும் ஐ.நா அறிக்கை – பாகம் 1

மல்லராஜன் றஜீபா மற்றும் அவரது தம்பியான கானகன் ஆகியோர் மே 15 அன்று பதுங்குகுழியில் தஞ்சமடைந்திருந்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் முறையே  பத்து மற்றும் ஏழு வயதாகும். இவர்களது பெற்றோர்கள், நான்கு சகோதரர்கள் ஆகியோர் எறிகணை வீச்சின் போது பதுங்குகுழியில் வைத்துக் கொல்லப்பட்டனர்.