மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

சிறிலங்காவில் 73 ஆயிரம் அடிமைகள் – அனைத்துலக ஆய்வு கூறுகிறது

சிறிலங்காவில் சுமார் 73,600 பேர் தமது உரிமைகளை இழந்த நிலையில் அடிமைகளாக இருப்பதாக அனைத்துலக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்கான பூகோள அடிமைகள் சுட்டியை, Walk Free Foundation வெளியிட்டுள்ளது.

வடக்குக் கிழக்கு மீண்டும் இணைய இந்தியா, சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்கான காலம் கடந்துவிட்டது – கேணல் ஹரிகரன்

தமிழர்களுக்கு எதிராக 1983ல் இனக்கலவரம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், எழுச்சியுற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தோல்வியுற்ற பின்னர், தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான வரலாற்று ரீதியான காலப்பகுதி முடிவடைந்து விட்டது என்றே நான் கருதுகிறேன்.

உயிர்த்தெழும் சாட்சியங்கள்! – டி.அருள் எழிலன்

தங்களின் வரலாற்று வலியை, இன அழிப்பின் வேதனையை வலிமிகுந்த சினிமாவாகப் பதிவுசெய்ய ஆரம்பித்திருக்கிறார்கள், உலகம் முழுக்க உள்ள ஈழத் தமிழர்கள். போர் தந்த துயரங்களை லண்டன், பிரான்ஸ், நார்வே, ஆஸ்திரேலியா, ஜெர்மனி… போன்ற நாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறை, திரைப்படங்கள் மூலம் பேசுவதால் மேற்கு உலக நாடுகளில் ஈழ சினிமா வேர்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

‘மீறியபெடக் கிராமத்திற்கு மண்சரிவு அபாயங்களைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்படவில்லை’

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காணப்படும் மேலும் பல கிராமங்கள் இவ்விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறைக்குள் உள்வாங்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

பூசா இராணுவ முகாமுக்குள் அதிரடியாக நுழைந்து தேடுதல் நடத்திய அமெரிக்க போர்க்குற்ற நிபுணர்

கடந்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் சிறப்பு தூதுவரான ஸ்டீபன் ஜே ராப், பூசாவில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம் ஒன்றுக்குள் திடீரென உள்நுழைந்து சோதனை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.