மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகிறது.

இனப்படுகொலை நடைபெறவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை

சிறிலங்காவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை எனக் கூறுபவர்களுக்கு, பிரம்டனிலோ, கனடாவிலோ இடமில்லை, கொழும்புக்குத் திரும்பிச் செல்லுங்கள் என்று, பிரம்டன் நகர முதல்வர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.

தடைக்குப் பின் கொழும்பு வந்துள்ள முதலாவது வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்

பிரெஞ்சு கடற்படையின், நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பலான, ‘பியூடெம்ப்ஸ்-பியூப்ரே’ (Beautemps-Beaupré)  நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளது.

சிறிலங்காவில் இருந்து இந்தியா செல்லும்  விமானங்கள் கடத்தப்படலாம் என எச்சரிக்கை

சிறிலங்கா,நேபாளம், பங்களாதேசில் இருந்து இந்தியாவிற்கு செல்லும்  விமானங்களை கடத்த, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அமைப்புகள் அல்லது தனிநபர்கள் முயற்சிக்கலாம் என, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO),எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்காவின் பாதீட்டு பற்றாக்குறை அதிகரிப்பு – கையிருப்பும் கரைகிறது

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிறிலங்கா அரசாங்கம், சுமார் 500 பில்லியன் ரூபா பாதீட்டுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட ரெலோ முயற்சி

வடக்கு, கிழக்கில் எந்த கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில்,  தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சி அமைப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்திய- சிறிலங்கா உடன்பாடுகளுக்கு தடை கோரி உயர்நீதிமன்றில் மனு

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் கையெழுத்திடப்பட்ட, ஏழு புரிந்துணர்வு உடன்பாடுகளை, செல்லுபடியற்றவை என உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிங்களப் பேரினவாதக் கட்சிகளிடம் சிக்கிய மன்னார், வவுனியா மாவட்டங்கள்

உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ள போதும், மன்னார், வவுனியா மாவட்டங்கள், சிங்களப் பேரினவாதக் கட்சிகளிடம் பறிபோயிருக்கின்றன.

உள்ளூராட்சித் தேர்தல் இறுதி முடிவு- யாருக்கு, எவ்வளவு வாக்குகள், ஆசனங்கள்?

சிறிலங்காவில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் 265 சபைகளில், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ள போதும், 126 சபைகளில் மட்டும் தனித்து ஆட்சியமைக்கும் பலத்தைப் பெற்றுள்ளது.

சிறிலங்காவில் சீனாவின் இரு பாரிய முதலீட்டுத் திட்டங்களில் இழுபறி

சிறிலங்காவில் சீனாவின் இரண்டு பாரிய முதலீட்டுத் திட்டங்கள் இழுபறி நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.