மேலும்

பிரிவு: செய்திகள்

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஏட்டிக்குப் போட்டியாக போராட்டம்

மத்துகமவில் ஆளும்கட்சி  மற்றும் எதிர்க்கட்சியினரால் ஏட்டிக்குப் போட்டியாக  இரண்டு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க தூதுவருக்கு நாளை பிரமாண்டமான பிரியாவிடை விருந்து

கொழும்பில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், வரும் 16 ஆம் நாள் நாட்டை விட்டு வெளியேறவுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பிரியாவிடை  சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

நாளை கொழும்பு வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நாளை சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மற்றொரு இஸ்லாமிய அமைப்பும் தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்ப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதக் குழுவொன்றை, சிறிலங்கா அரசாங்கம் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணையை தாமதிக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

கல்வி அமைச்சரான, சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான  நம்பிக்கையில்லா பிரேரணையை  சபாநாயகரிடம் கையளிப்பதை தாமதப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இந்திய இராணுவத் தளபதியை சந்திக்காத சிறிலங்கா அதிபர், பிரதமர்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி சிறிலங்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பியுள்ளார்.

கொழும்புத் திட்டத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது

76 ஆண்டுகள் பழமையான கொழும்பு திட்ட பேரவையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிப்பு

சிறிலங்கா இராணுவத்தினரால் வழங்கப்பட்ட துப்பாக்கி பாதாள உலக குழுவினரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது தொடர்பாக,  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட அமைப்புகள், தனிநபர்களின் திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது

தீவிரவாத அமைப்புகளாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான அரசிதழ் அறிவிப்பில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய அரசிதழ் அறிவிப்பு  சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலரிடம் விடை பெற்றார் ஜூலி சங்

சிறிலங்காவில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து கொண்டு வெளியேறவுள்ள, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் , சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை  இன்று பாதுகாப்பு அமைச்சில்  விடைபெறுவதற்காக சந்தித்துள்ளார்.