மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

காலி முகத்திடலில் மகிந்த அணியின் பேரணிக்கு அனுமதி மறுப்பு

காலி முகத்திடலில் மே நாள் பேரணியை நடத்துவதற்கு, கூட்டு எதிரணிக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.

சிறிலங்கா அதிபரின் உரை மீது விவாதம் நடத்த சிறிலங்கா அரசு இணக்கம்

சிறிலங்கா நாடாளுமன்றம் மீண்டும் மே 8ஆம் நாள் கூட்டப்படும் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிகழ்த்தவுள்ள அரசாங்கத்தின் கொள்கை பற்றிய அறிக்கை மீது விவாதம் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட உயர் அதிகாரிகளையும் பணியில் இருந்து இடைநிறுத்த உத்தரவு

இந்திய வணிகரிடம் 20 மில்லியன் ரூபா இலஞ்சப் பணம் பெற்றுக் கொண்ட போது கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்ட, இரண்டு மூத்த அரச அதிகாரிகளையும், உடனடியாக பணியில் இருந்து இடைநிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

கீத் நொயார் கடத்தல் – சரத் பொன்சேகாவிடம் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

10 பிரதி அமைச்சர்கள், 8 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

சிறிலங்கா அமைச்சரவையில் நேற்று முன்தினம் செய்யப்பட்ட மாற்றங்களை அடுத்து, நேற்று 10 பிரதி அமைச்சர்கள் மற்றும் 8 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொன்சேகாவின் பதவியைக் கெடுத்த காவல்துறை அதிகாரி

இராணுவ அதிகாரி ஒருவரை, சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டாம் என்று  பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவரே சிறிலங்கா அதிபருக்கு கூறியுள்ளார் என்று அமைச்சர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

‘புனுகுப் பூனை’க்குப் பொருத்தமான பதவி – பொன்சேகாவைக் கிண்டலடிக்கும் நாமல்

அமைச்சரவை மாற்றத்தின் போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு மாத்திரமே விஞ்ஞான முறையின் அடிப்படையில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முழுமையான மாற்றம் நடக்காது – ஒஸ்ரின் பெர்னான்டோ

சிறிலங்காவில் ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம், முழுமையான அமைச்சரவை மாற்றமாக இருக்காது என்று சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் ‘16 பேர் அணி’க்கு அழைப்பு இல்லை

கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறிய  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வுக்கான அழைப்புகள் அனுப்பப்படவில்லை.

இன்று காலை 10 மணிக்கு அமைச்சரவை மாற்றம் – ரவிக்கு கிட்டுமா பதவி?

சிறிலங்கா அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படவுள்ளது. இன்று காலை 10 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.