மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

மன்னாரில் இன்று கலந்துரையாடலை ஆரம்பிக்கிறது காணாமல் போனோருக்கான பணியகம்

காணாமல் போனோருக்கான பணியகம் பிராந்திய மட்டத்திலான கலந்துரையாடல்களை இன்று ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் பணியகம் அமைக்கப்பட்ட பின்னர், முதலாவது கலந்துரையாடல் மன்னாரில் இன்று இடம்பெறவுள்ளது.

மூன்று எரிவாயு மின் திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி

மூன்று திரவ இயற்கை எரிவாயு மின்திட்டங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்கள் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

நீதிபதிகளை நியமிக்காமல் இழுத்தடிக்கிறார் சிறிலங்கா அதிபர் – அஜித் பெரேரா

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சட்டம் நினைவேற்றப்பட்ட போதிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, போதியளவு நீதிபதிகளை நியமிக்க தவறி விட்டார் என்று, அமைச்சர் அஜித் பெரேரா குற்றம்சாட்டியுள்ளார்.

பிபிசி செய்தியாளரை விசாரிப்பதில் இருந்து பின்வாங்கியது குற்றப் புலனாய்வுப் பிரிவு

சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ கீச்சகப் பக்கத்தில் கருத்து பதிவிட்டமை தொடர்பாக பிபிசி செய்தியாளரை விசாரணைக்கு அழைத்திருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு, தமது அழைப்பாணையை விலக்கிக் கொண்டுள்ளது.

மறுசீரமைப்புகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்

சிறிலங்காவின் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க செயல்முறைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங் லாய் மார்கே தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரிடம் மன்னிப்புக் கோரினார் சரத் பொன்சேகா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மன்னிப்புக் கோரியுள்ளார்.

திடீர் சுகவீனமுற்ற கபீர் காசிமுக்கு அறுவைச் சிகிச்சை

திடீர் சுகவீனமுற்ற நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்ட ஐதேக தவிசாளரான அமைச்சர் கபீர் காசிமுக்கு அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

கைது செய்யப்பட்ட அதிகாரிகளுடன் இலஞ்சப் பணத்தை பகிரவிருந்த முக்கிய பிரமுகர்

சிறிலங்கா அதிபரின் செயலக தலைமை அதிகாரி மகாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசநாயக்க ஆகியோரால் பெறப்பட்ட இலஞ்சப் பணத்தில் ஒரு பகுதி முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் பங்கிடப்படவிருந்ததாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் – ஜப்பானிய நிபுணர் குழு சிறிலங்கா அதிபருடன் பேச்சு

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் சிறப்பு ஆலோசகர்  கலாநிதி ஹிரோரோ இசுமி தலைமையிலான ஜப்பானிய அதிகாரிகளின் சிறப்புக் குழுவொன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.