மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

அரசியலமைப்பை மதித்து செயற்பட வேண்டும் – பிரித்தானியா

அனைத்துக் கட்சிகள் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரிகள் சிறிலங்காவின் அரசியலமைப்பை மதித்து, சரியான அரசியல் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு ரீதியாக நானே பிரதமர் – மைத்திரிக்கு ரணில் கடிதம்

அரசியலமைப்பு ரீதியாக தாமே சிறிலங்காவின் பிரதமராக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

பதவி நீக்கப்பட்டது குறித்து ரணிலுக்கு சிறிலங்கா அதிபர் கடிதம்

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சற்று முன்னர், ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

ஜனநாயகத்துக்கு விரோத ஆட்சிக் கவிழ்ப்பு – மங்கள சமரவீர

சிறிலங்காவில் இன்று மாலை ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம், ஜனநாயகத்துக்கு விரோதமான ஆட்சிக் கவிழ்ப்பு என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நிதியமைச்சரான மங்கள சமரவீர.

நானே சிறிலங்காவின் பிரதமர் – என்கிறார் ரணில்

மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், தானே இப்போதும் பிரதமராக இருப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொள்கலன் முனையம் இந்தியாவுக்குக் கிடையாது – சிறிலங்கா அதிபர் விடாப்பிடி

கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு விட்டுக் கொடுப்பதில்லை என்பதில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விடாப்பிடியான நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முடிவுக்கு வந்தது வட மாகாண சபையின் பதவிக்காலம் – பிரித்தானிய தூதுவர் கவலை

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, மாகாண சபை ஆளுனர் றெஜினோல்ட் குரேயின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது.

இரு தமிழர்களை கடத்திய சம்பூர் கடற்படைத் தள துணைத் தளபதிக்கு விளக்கமறியல்

கொழும்பில் இரண்டு தமிழர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய குற்றச்சாட்டில், சம்பூரில் உள்ள சிறிலங்கா கடற்படையின் துணை கட்டளை அதிகாரி லெப்.கொமாண்டர் சம்பத் தயானந்தவை, விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கண்ணிவெடிகளை அகற்ற 600 மில்லியன் ரூபாவை வழங்குகிறது அமெரிக்கா

சிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த ஆண்டில், 600 மில்லியன் ரூபாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்றார் அலய்னா

சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று  பதவியேற்றுக் கொண்டார்.