மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

போர்க்குற்றவாளிகள் இனிமேலும் ஐ.நாவின் கௌரவமான பதவிகளை வகிக்க முடியாது – யஸ்மின் சூகா

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, சிறிலங்கா இராணுவ அதிகாரியான, லெப்.கேணல் கலன அமுனுபுரவை மாலியில் இருந்து திருப்பி அனுப்ப ஐ.நா எடுத்துள்ள முடிவுக்கு, அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளரான, யஸ்மின் சூகா வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் உத்தரவு – கொந்தளிக்கிறார் கோத்தா

போர் வெற்றிக்குக் காரணமான இராணுவ அதிகாரி ஒருவரை  மாலியில் இருந்து திருப்பி அழைக்க வேண்டிய நிலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதானது, அனைத்துலக  சமூகத்தின் ஆதரவை இந்த அரசாங்கம் பெறவில்லை என்பதையே காட்டுகிறது என சிறிலங்காவின்  முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அடுத்தவாரம் அட்மிரல் விஜேகுணரத்னவை நீதிமன்றில் நிறுத்துவோம் – சிஐடி உறுதி

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காக, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை அடுத்தவாரம் கைது செய்யவுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் 5 ஆண்டுகளில் வேலைப்படை 22 வீதத்தினால் அதிகரிப்பு

வடக்கு மாகாணத்தில், 2011ஆம் ஆண்டுக்கும், 2015ஆம் ஆண்டுக்கும் இடையில், 78 ஆயிரம் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், இந்தக் காலகட்டத்தில், வடக்கின் வேலைப்படை 22 வீதத்தினால் அதிகரித்துள்ளது என்றும், உலக வங்கி தெரிவித்துள்ளது.

சீனாவிடம் இருந்து சிறிலங்காவுக்கு கிடைத்த 1 பில்லியன் டொலர்

சீனாவிடம் இருந்து நேற்று சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் நிதியுதவி கிடைத்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  சிறிலங்கா நாணயத்தை வலுப்படுத்தும் வகையிலும், வெளிநாட்டு நாணயக் கையிருப்பை அதிகரிக்கவும் இந்த நிதியுதவி பயன்படும் என்று கூறப்படுகிறது.

அரசியல் கைதிகள் விடுதலை – அடுத்தவாரம் முடிவெடுப்போம் என அனுப்பி வைத்தார் சிறிலங்கா அதிபர்

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து. பிரதமர், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி, அடுத்த வாரம் முடிவு செய்யலாம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் ஒரு வாக்குறுதியைக் கொடுத்து அனுப்பியுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

‘றோ’ மீதான குற்றச்சாட்டின் எதிரொலி – அவசரமாக சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். 

‘றோ’ என்று கூறவேயில்லை – சிறிலங்கா அதிபரின் ஆலோசகர்

அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் எந்த இடத்திலும், ‘றோ’ என்ற பதத்தைப் பாவிக்கவேயில்லை, என்றும், இந்தியப் புலனாய்வு  சேவை என்றே குறிப்பிட்டார் எனவும், சிறிலங்கா அதிபரின் மூத்த ஆலோசகர் சிறிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.

மகிந்தவைப் பிரதமராக்குவதால் நெருக்கடி தீராது – ஜேவிபி

மகிந்த ராஜபக்சவை பிரதமராக கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதால் மட்டும், தற்போதைய நெருக்கடிகளைத் தீர்த்து விட முடியாது என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.

அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா

தமது அணை மற்றும் பாதை திட்டத்தில் சில கடன் பிரச்சினைகள் இருப்பதாக, சீனாவின்  துணை நிதி அமைச்சர் சூ ஜியாயி ஒப்புக் கொண்டுள்ளார் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.