மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

குரல் வாக்கெடுப்பை ஏற்கமுடியாது – சிறிலங்கா அதிபர் திட்டவட்டம்

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பெயர் கூறி அழைத்து அல்லது இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்ற வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரியை இன்று சந்திக்கிறார் ரணில்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சந்தித்துப் பேசவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு மகிந்தவிடம் கோரவுள்ளது ஐதேக

சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை பிற்பகல் கூடும்போது, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு- சர்ச்சைக்குரிய சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம், ஐக்கிய தேசிய முன்னணி கோரவுள்ளது.

மீண்டும் குதிரை பேரம் – 3 மில்லியன் டொலருக்கு விலை பேசப்படும் எம்.பிக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும்  குதிரை பேரத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் மீண்டும் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னொரு நம்பிக்கையில்லா பிரேரணையையும் எதிர்கொள்ளத் தயார் – சிறிலங்கா அரசாங்கம்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக முறையாக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று, ஆளும்தரப்பு உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

முக்கிய ஆலோசனையில் மகிந்த – வெளியேற்ற முடியாதென சூளுரை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சித் தலைவர்களுக்கு மைத்திரி வாக்குறுதி கொடுக்கவில்லையாம்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு அனுமதி அளிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைவர்களுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

முகம் சுழித்த வெளிநாட்டு இராஜதந்திரிகள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற மோதல்கள் மற்றும் தாக்குதல்களை வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் கூடுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்னும் சற்று நேரத்தில் கூடவுள்ளது.  நேற்று நாடாளுமன்ற அமர்வின் போது இடம்பெற்ற மோதல்கள் மற்றும் குழப்பங்களை அடுத்து இன்று பிற்பகல் 1.30 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

பதவியில் இருந்து இறங்க மறுக்கிறது மகிந்த அணி

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நிராகரித்துள்ள, அரசாங்கத் தரப்பு, மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலகமாட்டார் என்று அறிவித்துள்ளது.