நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் ஐதேக
பரந்தளவிலான கூட்டணி ஒன்றை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரந்தளவிலான கூட்டணி ஒன்றை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தை பதவியில் இருந்து நீக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த 14ஆம் நாளும், 16ஆம் நாளும், நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்யும் நாடாளுமன்றப் பதிவேடு (ஹன்சார்ட்) அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் விசாரணை அலகின் பொறுப்பதிகாரியான, நிசாந்த சில்வாவின் இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு, தாங்கள் உத்தரவிடவில்லை என்று சிறிலங்காவின் தேசிய காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய விசாரணை அதிகாரி நிசாந்த சில்வாவுக்கு, வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவை, தேசிய காவல்துறை ஆணைக்குழு ரத்துச் செய்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேல் மாகாணசபையில் நேற்று வரவுசெலவுத் திட்ட உரையை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நிதி தொடர்பான பிரேரணைகளை அரசாங்கத் தரப்பே நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியும் என்று அவைத் தலைவரான அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அமர்வு வரும் 23ஆம் நாள் – வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய போது, உடனடியாகவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இன்று முற்பகல் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் சந்திக்கவுள்ளதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்தார்.
சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு, மகிந்த ராஜபக்ச, நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிபந்தனை விதித்துள்ளார்.