மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சீன வங்கிக் கடனில் இழுபறி –  பிணைமுறிகள் மூலம் 2 பில்லியன் டொலரை திரட்ட திட்டம்

சீன வங்கியிடம் இருந்து கோரப்பட்ட கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பிணைமுறி சந்தையில் 2 பில்லியன் டொலர்களை திரட்டும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

18 ஆவது திருத்தத்தை மீளக் கொண்டு வரும் முயற்சி – சிவில் சமூக அமைப்புகள் எதிர்ப்பு

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் திட்டத்துக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒத்துழைத்து வருகிறார் என்று சிவில் சமூக அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

சிறிசேனவை போட்டியில் நிறுத்தினால் சுயேட்சை வேட்பாளரை களமிறக்க பசில் திட்டம்

அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த மகிந்த ராஜபச்ச முடிவு செய்தால், பொதுஜன முன்னணியின் சார்பில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்த பசில் ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

றோகண விஜேவீரவை முன்னிலைப்படுத்தக் கோரும் ஆட்கொணர்வு மனு நிராகரிப்பு

கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட ஜேவிபி தலைவர் றோகண விஜேவீரவை நீதிமன்றில் நிறுத்தக் கோரி, அவரது மனைவி மேன்முறையீட்டு நீதிமன்றில், சமர்ப்பித்திருந்த ஆட்கொணர்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் திருப்பி அனுப்பிய 8 பேரை தடுத்து வைக்க உத்தரவு

ரியூனியன் தீவில் இருந்து பிரெஞ்சு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்ட  64 பேர் எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விக்னேஸ்வரனுக்கு எதிரான மேன்முறையீட்டு மனு- வியாழன்று விசாரணை ஆரம்பம்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மீதான விசாரணை வரும் 21ஆம் நாள் ஆரம்பிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகர் சிறிலங்கா வருகிறார்

ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகரான நாடாளுமன்ற உறுப்பினர் கென்ராரோ சோனோரா அதிகாரபூர்வ பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

கடல்சார் பாதுகாப்புக்காக சிறிலங்காவுக்கு 39 மில்லியன் டொலரை வழங்குகிறது அமெரிக்கா

வங்காள விரிகுடா முனைப்பு திட்டத்தின் கீழ் கடல்சார் பாதுகாப்பு, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, மற்றும் கடல்சார் விழிப்புணர்வுக்கான ஆதரவாக, சிறிலங்காவுக்கு 39 மில்லியன் டொலர் நிதியை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் முதன்மை பிரதி உதவிச் செயலர் தோமஸ் டி வஜ்டா,தெரிவித்துள்ளார்.

பொதுஜன முன்னணியின்  புதிய அதிபர் டிசெம்பர் 9இல் பதவியேற்பார் – பசில்

சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த, சிறிலங்காவின் புதிய அதிபர், வரும் டிசெம்பர் 9 ஆம் நாள் பதவியேற்றுக் கொள்வார் என்று அந்தக் கட்சியின் நிறுவுநரான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

டெனீஸ்வரன் தொடர்ந்த வழக்கு – விக்னேஸ்வரனுக்குப் பின்னடைவு

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.