கரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணியும் சீனாவிடம்
கரவெலப்பிட்டியவில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
கரவெலப்பிட்டியவில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலைய கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வது குறித்து கட்சியின் அடுத்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக, வெளியாகிய செய்திகளை, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் நிராகரித்துள்ளனர்.
மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் காலத்தைக் கண்டறிவதற்கான சோதனை அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் மாநாட்டில், சிறிலங்கா குறித்தும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க குடியுரிமையை கோத்தாபய ராஜபக்ச கைவிடும் முயற்சி வெற்றியளிக்காது என்ற நம்பிக்கையிலேயே, அதிபர் மைத்திரிபால சிறிசேன தாம் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிர்பார்ப்பில் உள்ளார் என்று கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் சீனா தலையீடு செய்யாது என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடம், சீனத் தூதுவர் செங் ஷியுவான் உறுதியளித்துள்ளார்.
பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண் என்று சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பி.எம்.எஸ் சார்ள்சை வர்ணித்துள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, அவர் மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு, இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும், 15ஆம் நாள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
கட்டார் நாட்டுக்கான சிறிலங்காவின் தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக அவரை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்புமாறு உத்தரவிட்டார் என செய்திகள் வெளியாகியிருந்தன.