மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

அட்மிரல் கரன்னகொடவுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரம் தாக்கல்

கொழும்பில் 2008 – 09ஆம் ஆண்டு காலப்பகுதியில்  11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு எதிராக விரைவில் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

9 நாடுகளில் இருந்து நுழைவிசைவு இன்றி சிறிலங்காவுக்கு பயணிக்கலாம்

பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நுழைவிசைவு இன்றி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஒரே வரிசையில் அரசியல் எதிரிகள்

சிறிலங்காவின் எதிரும் புதிருமான அரசியல் தலைவர்கள், நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர்.

2018இல் நாடாளுமன்றில் வாயை மூடியிருந்த 13 எம்.பிக்கள் – அங்கஜன், ஆறுமுகனும் அடக்கம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 2018ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசெம்பர் வரையான நாட்களில், 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவாதங்கள் எதிலும் உரையாற்றவில்லை என்று தெரியவந்துள்ளது.

ஊடகத்துறை அமைச்சராகப் பதவியேற்றார் ருவன் விஜேவர்த்தன

சிறிலங்காவின்  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான,  ருவன் விஜேவர்த்தன சற்று முன்னர், ஊடகத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். 

சிறிலங்கா- சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக, இரண்டு நாடுகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு தழுவிய முழு அடைப்பு – இன்னமும் பச்சைக்கொடி காண்பிக்காத கூட்டமைப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காத்து வருகிறது.

யாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபருக்கு எதிராக மற்றொரு அரசியலமைப்பு மீறல் வழக்கு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்து பயணம்

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.