மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் பாகிஸ்தான் அதிபர்

சிறிலங்காவுக்கு குறுகிய காலப் பயணம் ஒன்றை மேற்கொண்ட பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசெய்ன், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலராக மகிந்த அமரவீர தெரிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய பொதுச்செயலராக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் நேற்று முன்னிரவு நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  நிறைவேற்றுக்குழுக் கூட்டத்திலேயே இந்த தெரிவு இடம்பெற்றது.

பாகிஸ்தான் அதிபர் சிறிலங்காவுக்கு திடீர் பயணம் – மைத்திரி, ரணிலை சந்திக்கிறார்

பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசேன் சிறிலங்காவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

தமது பணியாளர் வெள்ளைவானில் கடத்தப்பட்ட விவகாரம் – கவனம் செலுத்துமாம் ஐ.நா

சிறிலங்காவில் பணியாற்றிய போது தமது பணியாளர்களில் ஒருவர் வெள்ளைவானில் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக ஐ.நா கவனம் செலுத்தும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய பொதுச்செயலர் யார்? – இன்று முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

தொடர்கிறது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் – நாடாளுமன்றில் இன்று சிறப்பு விவாதம்

மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரும் அரசியல் கைதிகளில் நான்கு பேரின் நிலைமை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரகீத் கடத்தல் வாக்குமூலம் அளிக்க மறுத்தார் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சியமளிக்க மறுப்புத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், பிரேசிலுக்கான  சிறிலங்கா தூதுவருமான ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய.

தாய்லாந்து பிரதிப் பிரதமர் தலைமையிலான குழு சிறிலங்கா வருகிறது

தாய்லாந்தின் பிரதிப் பிரதமர் தலைமையிலான அதிகாரபூர்வ குழுவொன்று, பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு மாவை, சித்தார்த்தன் வரவில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றிருந்த நிலையில், இந்தக் கூட்டத்தில், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் பங்கேற்கவில்லை.

இந்தியாவுடன் எட்கா உடன்பாடு – சிறிலங்கா அரசை எச்சரிக்கிறார் மகிந்த

இந்தியாவுடன் எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டைச் செய்து கொள்ளும் விடயத்தில் எச்சரிக்கை அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.