மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

அனைத்துலக அளவில் நெருக்கடியை ஏற்படுத்தும்- சிறிலங்கா அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

சிறுபான்மை மக்களுக்கு எதிரான தொடர்ச்சியாக சம்பவங்கள் அனைத்துலக அளவில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கண்டியில் முஸ்லிம்களின் பெருமளவு சொத்துக்கள் அழிவு

கண்டி மாவட்டத்தில் உள்ள திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களில் முஸ்லிம்களின் பெரும் எண்ணிக்கையான வீடுகள், சொத்துகளும், பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டுள்ளன.

ஏனைய பகுதிகளுக்கும் வன்முறை பரவும் ஆபத்து – பதற்றத்தில் முஸ்லிம்கள்

கண்டியில் ஏற்பட்டுள்ள இனமோதல்கள் சிறிலங்காவின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக் கூடிய ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக சுதந்திரக் கட்சி போர்க்கொடி

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்களின் தெரிவு விடயத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இணக்கப்பாடு இல்லை என்று அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

மூன்றாகப் பிளவுபட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கடும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மூன்று விதமான நிலைப்பாடுகள் தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர்

நௌருவில் அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட மற்றொரு தொகுதி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – நாளை முடிவு செய்கிறது கூட்டு எதிரணி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து முடிவு செய்வதற்காக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நாளை கூடவுள்ளது.

222 மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுடன் புதிய சட்டம் – அலறும் முஸ்லிம் பிரதிநிதிகள்

மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும் குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாகாணசபைகளுக்கான தேர்தலை நேரடி மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையில் நடத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஜப்பான் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இம்மாத நடுப்பகுதியில் ஜப்பானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

தாமதமான நடவடிக்கை என்றாலும் வரவேற்கிறது அனைத்துலக சமூகம்

காணாமல் போனோர் பணியகத்துக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை, அனைத்துலக நாடுகள் வரவேற்றுள்ளன.