மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

காணாமல் போனோர் பணியக ஆணையாளர்களாக 7 பேர் தெரிவு – நிமல்காவுக்கு ஜேவிபி எதிர்ப்பு

காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்களாக நியமிப்பதற்கு ஏழு பேரின் பெயர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அரசியலமைப்பு சபை முன்மொழிந்துள்ளது.

கூட்டமைப்பு குழப்பங்களைத் தீர்க்க உயர்மட்ட முயற்சிகள்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனப்பங்கீட்டில் இணப்பாடு ஏற்படாத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், ஏற்பட்ட குழப்ப நிலையை தீர்த்து வைக்கும் உயர்மட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நெருங்கியது காற்றழுத்தம் – சூறாவளி ஆபத்து இல்லை என்கிறது சிறிலங்கா

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், சிறிலங்காவை நெருங்கியுள்ள நிலையிலும்,  சூறாவளி தாக்கும் ஆபத்து ஏதும் இல்லை என்று சிறிலங்காவின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஈபிஆர்எல்எவ் – தமிழ் காங்கிரஸ் உறவில் விரிசல் : சங்கரியுடன் சேருகிறார் சுரேஸ்

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் – ஈபிஆர்எல்எவ் இணைந்து பொதுச்சின்னத்தில் போட்டியிடும் முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் முயற்சியில் ஈபிஆர்எல்எவ் இறங்கியுள்ளது.

‘சாகர்’ புயல் வரும் 5ஆம் நாள் வடக்கு, கிழக்கைத் தாக்கும் ?

அந்தமான் தீவுப் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம், தீவிரமடைந்து வருவதால், சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அடுத்த வாரத்தில் கடும் மழை பெய்வதற்குச் சாத்தியங்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் ‘ஓக்கி’ புயலின் கோரத் தாண்டவம்

வங்கக் கடலில் உருவான ஓக்கி (OCKHI) புயல் சிறிலங்காவைக் கடந்து சென்ற போது, வீசிய சூறைக்காற்றினாலும், கொட்டிய மழையினாலும், குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசிதழுக்கு எதிரான மனுக்களை விலக்கிக் கொள்ள இணக்கம் – உள்ளூராட்சித் தேர்தலுக்கு பச்சைக்கொடி

உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான அரசிதழுக்கு (வர்த்தமானி) எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களை விலக்கிக் கொள்ள முறைப்பாட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.

ஐதேகவினர் வெளிநாடு செல்லத் தடை – கூட்டு அரசைக் கவிழ்க்க முயற்சி?

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவரான சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

கைது பயத்தில் கோத்தா – தடுக்குமாறு நீதிமன்றில் அடைக்கலம்

தம்மைக் கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று மேல்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

யாழ்.குடாநாட்டு வெள்ளத்துக்கு தவறான வடிகாலமைப்பு முறையே காரணம் – பிரதீப் கொடிப்பிலி

அண்மைய மழையின் போது, யாழ். குடாநாட்டில் பல இடங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டமைக்கு, கடல்நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்தமை காரணம் அல்ல என்று சிறிலங்கா அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.