மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

போர்க்குற்ற விசாரணை, அனைத்துலக பிரகடனங்களில் கையெழுத்திட சிறிலங்காவுக்கு அழுத்தம்

தெளிவான காலவரம்புடன் கூடிய போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும், ரோம், அனைத்துலக குற்றவியல் உடன்பாடுகளில் கையெழுத்திட வேண்டும் என்றும், சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சிறிலங்காவிடம் அனைத்துலக சமூகம் வலியுறுத்தியுள்ளது.

ஜின்தோட்டையில் முஸ்லிம்களின், வீடுகள், கடைகள் எரிப்பு- இனமுறுகலை அடுத்து ஊடரங்கு அமுல்

காலி மாவட்டத்தில் உள்ள ஜின்தோட்டை பகுதியில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களை அடுத்து  அங்கு நேற்றிரவு முதல் காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் – ஏபி வெளியிட்டுள்ள படங்கள்

சிறிலங்காவில் தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்ற தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள், பாலியல் வதைகள் தொடர்பாக, சாட்சியங்கள், ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது அசோசியேட்டட் பிரஸ்.

வவுனியாவில் தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம்

சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில்  கூடி ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரம்

சிறிலங்காவில் புதிய முறைப்படி  உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்., கொழும்பு மாநகரசபைகளின் உறுப்பினர் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு

யாழ்ப்பாணம், கொழும்பு மாநகரசபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த முறையை விட இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் தமிழர்கள் மீதான இராணுவ மீறல்களை உறுதிப்படுத்துகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கில் சில தமிழர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரால் மீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் மீதான சித்திரவதை குற்றச்சாட்டு- விசாரிக்கப்படும் என்கிறது சிறிலங்கா

சிறிலங்காவில் தமிழர்கள் மீது தற்போதும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக, வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார செயலர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சுமந்திரனைச் சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, பதில் உதவிச் செயலர் ரொம் வஜ்டா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

தரம்குறைந்த எரிபொருளை கப்பலில் இருந்து இறக்குமாறு அழுத்தம் – சிறிலங்கா அமைச்சர் குற்றச்சாட்டு

சிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில், தரம்குறைந்த எரிபொருளை கப்பலில் இருந்து இறக்குமாறு தனக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக, சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.