மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் – இன மோதல்கள் வெடிக்கும் ஆபத்து

சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் தோன்றியுள்ள பதற்ற நிலையைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

காளான்கள் போல முளைக்கும் சீன வாணிப நிலையங்கள் – சிறிலங்கா அதிபர் அதிருப்தி

சிறிலங்கா முழுவதும் காளான்களைப் போல முளைத்துக் கொண்டிருக்கும், சீன வாணிப நிலையங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.

போர்க்கால மரணங்களை உறுதிப்படுத்த புதிய கணக்கெடுப்பை நடத்துகிறது சிறிலங்கா அரசு

போரின்போது வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கம் நாடு முழுவதிலும் புதிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி வருகிறது.

இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை மாற்றம்

சிறிலங்காவில் இன்று அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. அதிபர் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில்  பொறுப்பேற்கவுள்ளனர்.

முன்னாள் போராளியை நாளை நாடுகடத்துகிறது அவுஸ்ரேலியா

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான சாந்தரூபன் தங்கலிங்கம் (வயது-46) நாளை அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளார்.

மாணவர்களுக்கு டப்லட் வழங்கும் திட்டத்தை இடைநிறுத்தினார் சிறிலங்கா அதிபர்

உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டப்லெட் கணினிகளை வழங்கும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார்.

வடக்கில் ‘தொங்கு’ சபைகளில் ஆட்சியைப் பிடிக்க தமிழ்க் கட்சிகள் போட்டி

அண்மையில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் பூநகரி மற்றும் ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய எந்த உள்ளூராட்சி சபையிலும், பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில், இங்கு ஆட்சியமைப்பது தொடர்பாக தீவிர முயற்சிகளில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன.

சிறிலங்கா குறித்து ஜெனிவாவில் இரண்டு முக்கிய விவாதங்கள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், மார்ச் 16ஆம் நாளும், மார்ச் 21ஆம் நாளும் சிறிலங்கா தொடர்பான இரண்டு முக்கிய விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

‘தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும்’ – சம்பந்தன்

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் தொடர்ந்தும் இதே போக்கில் செயற்பட்டால் தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுக்களில் இருந்து ஒதுங்கியது கூட்டமைப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நடக்கும் எந்தவொரு பேச்சுக்களிலும் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.