மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

மத்தல, கொழும்பை இந்தியா கேட்டதன் பின்னணியை வெளிப்படுத்துகிறார் விஜேதாச

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால் தான், கொழும்பு துறைமுகத்தையும், மத்தல விமான நிலையத்தையும் இந்தியா கோரியது என்று சிறிலங்காவின் கல்வி உயர் கல்வி அமைச்சராக விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய ஆயுதப்படைகளில் சிறிலங்காவில் உள்ளவர்களும் இணையலாம்

பிரித்தானியாவில் வசிக்காத இலங்கையர்களும் கூட பிரித்தானிய ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும் என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.

சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிப்பதற்கு சிறிலங்கா அதிபர் ஆலோசனை

சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பறிப்பதற்கான, சட்ட நடைமுறைகள் குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருகிறார் என்று, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த மகிந்த

உங்களின் கோரிக்கைக்கு இணங்கி விட்டு நான் எப்படி கார்ல்டன் இல்லத்துக்குத் திரும்ப முடியும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபரிடம் ஐ.நா பொதுச்செயலர் கண்டிப்பு

சிறிலங்காவில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை நிறுத்துவோம் – சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

சிறிலங்கா தனது மனித உரிமைகள் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கினால், ஜிஎஸ்பி  பிளஸ் வரிச்சலுகையை நிறுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம், சிந்திக்க வேண்டி நிலை ஏற்படும் என்று சிறிலங்காவுக்கான ஐரோப்பிய  ஒன்றியத்தின் தூதுவர் துங் லாய் மார்கே எச்சரித்துள்ளார்.

‘அமெரிக்காவின் இராஜதந்திரம் எங்கே?’ – சமந்தா பவர்

மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் சிறிலங்காவில் வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாகவும், ஐ.நா தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

மகிந்தவைச் சந்தித்தார் பாகிஸ்தான் தூதுவர்

சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவையும், சபாநாயகர் கரு ஜெயசூரியவையும், பாகிஸ்தான் தூதுவர் கலாநிதி சாஹிட் அகமட் ஹஸ்மட் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கொந்தளிப்புக்கு மத்தியில் கொழும்பு வந்தார் அமெரிக்காவின் புதிய தூதுவர்

சிறிலங்காவின் அரசியல் சூழல் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ள சூழ்நிலையில், சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இன்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.

சீனாவிடம் இறைமையை இழந்து விட்டது சிறிலங்கா – அமெரிக்க பாதுகாப்புச் செயலர்

சீனாவுடனான உடன்பாட்டின் விளைவாக, சிறிலங்கா தனது சொந்த துறைமுகத்தின் இறைமையை இழந்து விட்டது என, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் தெரிவித்துள்ளார்.