மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

இம்மாத இறுதியில் சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் இந்த மாத இறுதியில் கலைக்கப்பட்டு புதுிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மைத்திரியிடம் 5 கோரிக்கைகளை முன்வைத்த மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நடத்திய பேச்சுக்களின் போது, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தரப்பினால், ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முடிவுக்கு வந்தது மகிந்த – மைத்திரி பேச்சு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான பேச்சுக்கள் முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாமதமாக வந்து சேர்ந்தார் மகிந்த – மைத்திரியுடன் சந்திப்பு ஆரம்பம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிறிலங்கா அதிபரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்று வருகிறது.

ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு 11ம் நாள் வரை விளக்கமறியல் நீடிப்பு

சதொச வில் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு, வரும் மே 11ம் நாள் வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா அழுத்தம் எதையும் கொடுக்கவில்லை – என்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக, அமெரிக்காவிடம் இருந்து தமது அரசாங்கம் எந்தவொரு அழுத்தங்களையும் எதிர்கொள்ளவில்லை என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரியுடனான சந்திப்புக்கு குறித்து மகிந்தவுக்குத் தெரியாதாம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், நாளை சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்குத் தெரியாது என்று அவரது பேச்சாளர், தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கைது

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, சற்றுமுன்னர் சிறிலங்கா காவல்துறையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோன் கெரிக்கு ‘வீட்டுவேலை’ கொடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கையளித்த ஆவணத்தை வாங்கிப் பார்த்த, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, தனக்கு நிறைய வீட்டு வேலை தரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்கவை ஐதேக வெளியேற்றியது செல்லாது- உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க நீக்கப்பட்டது செல்லுபடியாகாது என்று சிறிலங்கா உயர்நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.