சிறிலங்கா அதிபரை வரவேற்றார் இந்தியப் பிரதமர் மோடி
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
நேற்றுமாலை, செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டின் வரவேற்பு நிகழ்வு பாரத் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, சிறிலங்கா அதிபரை இந்தியப் பிரதமர் வரவேற்று அவருடன் உரையாடியுள்ளார்.
அத்துடன் இராப்போசன விருந்துபசாரமும் இடம்பெற்றுள்ளது.


