மேலும்

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்- அரசியலமைப்பு பேரவை அனுமதி

மூத்த பிரதி கணக்காய்வாளர் நாயகம், எல்.எஸ்.பி. ஜெயரத்னவை சிறிலங்காவின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு, அரசியலமைப்பு பேரவை இன்று ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

சபாநாயகர்  ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை நடந்த அரசியலமைப்பு பேரவையின்  அமர்வின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதன் மூலம், 2025 ஏப்ரல் மாதம் சூலாலந்த விக்ரமரத்ன கணக்காய்வாளர் நாயகம் பதவியில் இருந்து  ஓய்வு பெற்ற பின்னர், கடந்த 9 மாதங்களாக  நிரந்தர கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு இருந்து வந்த வெற்றிடத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால், முன்மொழியப்பட்ட நான்கு பேரை, அரசியலமைப்பு பேரவை நிராகரித்த நிலையில்  இந்த நியமனத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *