மேலும்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நீதிக்கான சாட்சி போராட்டம்

கடந்த 1996 தொடக்கம் 2009 ஆம் ஆண்டுவரையான காலப் பகுதிகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, யாழ்ப்பாணம் நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் “நீதிக்கான சாட்சி” என்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தலைமையில் நேற்று இந்த போராட்டம் நடைபெற்றது.

1996.01.31 ஆம் நாள் கைது செய்யப்பட்டு, இன்று வரை சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதியின் சிறைவாழ்வின் 31வது ஆண்டை நினைவு கூரும் வகையில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது, சிறைவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறைக்கூண்டுக்குள், மெழுகுவர்த்தி போல தேய்ந்து செலும் அரசியல் கைதிகளின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் காட்சியமைப்பும் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் அரசியல் கைதிகளின் உறவுகள், வேலன் சுவாமிகள், அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சட்டத்தரணிகள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *