பருத்தித்துறையில் பழங்கால பீரங்கி கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரப் பகுதியில் நேற்று முன்தினம் நண்பகல் கட்டுமானப் பணிகளுக்காக அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதே இந்த பீரங்கி வெளிப்பட்டுள்ளது.
இது ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதுகுறித்து ஆய்வுகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், மற்றும் குண்டுகள் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் கோட்டை புனரமைப்பின் போதும் ஊர்காவற்றுறையிலும் இவை கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் வடமராட்சியில் முதல்முறையாக இந்த பீரங்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

