இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்
சிறிலங்காவின் மூத்த ஊடகவியலாளரும், பிரபலமான இராணுவ ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் காலமானார்.
81 வயதான அவர் இன்று காலை காலமானார் என்றும் அவரது இறுதி நிகழ்வு இன்று மாலை தெகிவளையில் உள்ள பெரிய பள்ளிவாசல் இடுகாட்டில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த ஊடகவியலாளரான இக்பால் அத்தாஸ், போர்க்காலத்தில் சண்டே ரைம்ஸ் வார இதழில் எழுதி வந்த இராணுவ ஆய்வு மற்றும் பாதுகாப்பு பத்திகள் மிகவும் பிரபலம் பெற்றிருந்தன.
அவர் சிஎன்என் மற்றும் பல அனைத்துலக ஊடக அமைப்புகளின் செய்தியாளராகவும் பணியாற்றியிருந்தார்.
