மேலும்

கொழும்புத் திட்டத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது

76 ஆண்டுகள் பழமையான கொழும்பு திட்ட பேரவையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டுள்ளது.

1950 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கொழும்பு திட்ட பேரவை ஒரு பல்தரப்பு அபிவிருத்திக் கட்டமைப்பாகும்.

சிறிலங்காவின் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தை வலுப்படுத்த இது உதவியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 31 அனைத்துலக சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்காவின் பங்கேற்பை விலக்கிக் கொள்ளும் முடிவை எடுத்துள்ளார்.

அவ்வாறு அமெரிக்க விலகிக் கொள்ள முடிவெடுத்துள்ள அமைப்புகளில்  கொழும்பு திட்ட பேரவையும் ஒன்றாகும்.

அமெரிக்கா விலகினாலும், கொழும்பு திட்டபேரவை, நடைமுறையில் இருக்கும்.

இது உறுப்பு நாடுகளின் மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களைக் கொண்டுள்ளது.

முதலில் ஆசியாவில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்திக்கு உதவுவதற்காக நிறுவப்பட்ட கொழும்பு திட்டத்தின் ஆணை பின்னர், கல்வி, சுகாதாரம், மனிதவள அபிவிருத்தி மற்றும் போதைப்பொருள் தேவை குறைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது.

தற்போது, இந்தத் திட்டம் 27 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது மற்றும் தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான தளமாக செயல்படுகிறது.

1950 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், கொழும்புத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மொத்த உதவி,  கிட்டத்தட்ட 72 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

அதில், அமெரிக்கா சுமார் 41 பில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களித்தது,

இந்த  திட்டத்தின் கீழ் சிறிலங்கா பெற்ற குறிப்பிடத்தக்க நன்மைகளில் தடயவியல் ஆய்வகத் திறன்களில் பிராந்திய பயிற்சிகளின் மூலம்,  தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தை வலுப்படுத்தியது முக்கியமானதாகும்.

இதன்மூலம் கூட்டாளி நாடுகளிடமிருந்து நவீன கண்டறிதல் உபகரணங்களை நன்கொடையாக கிடைத்ததுடன், போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் திறனை மேம்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *