ஜெனரல் சவேந்திர சில்வாவின் சொத்துகள் குறித்து விசாரணை
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான- ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அவரது சொத்துக்கள் தொடர்பாகவே இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாமல் ராஜபக்ச, மகிந்த யாப்பா அபேவர்தன, மகிந்த அமரவீர, சாமர சம்பத் தசநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, காஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, ஜனக திஸ்ஸகுட்டியாராச்சி, வஜிர அபேவர்தன, மஹிபால ஹேரத், அனுர, பிரியதர்சன யாப்பா, அனுச நாணயக்கார, ஹர்ஷன ராஜகருண, வடிவேல் சுரேஸ், சாணக்கியன் இராசமாணிக்கம், சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), சாந்த அபேசேகர ஆகியோரின் சொத்துக்கள் தொடர்பாகவே விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இவர்கள் சொத்துக்கள் குறித்து விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளனர்.