மேலும்

6 குண்டுவெடிப்புகளில் குறைந்தது 10 பேர் பலி –  நூற்றுக்கணக்கானோர் காயம்

சிறிலங்காவில் இன்று காலை மூன்று தேவாலயங்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் நிகழ்ந்த ஆறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

ஷங்ரி- லா விடுதியின் மூன்றாவது மாடியிலும், கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிரான்ட் விடுதிகளிலும் குண்டுகள் வெடித்துள்ளன. இதில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பெருமளவானோர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார், நீர்கொழும்பு புனித செபஸ்தியார், மட்டக்களப்பு சீயோன் தேவாலயங்களிலும் குண்டுகள் வெடித்துள்ளன.

இந்த ஆறு தொடர் குண்டுவெடிப்புகளிலும் குரைந்தது 10 பேர் உயிரிழந்தனர். கொழும்பு மருத்துவமனைகளில் 280 பேருக்கு மேல் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு நடந்த கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவும், அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும் தற்போது சென்றுள்ளனர்.

அனைவரையும் அமைதியாக வீடுகளில் இருக்குமாறும்,  வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட பலர்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ள ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *