சீனாவைச் சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர்
சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்டு நேற்று பீஜிங் அனைத்துலக விமான நிலையத்திற்கு சென்றடைந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர் நேற்று சீனாவைச் சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் அவரை, சீன தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
இந்த பயணத்தின் போது, ”ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை” என்ற கருப்பொருளின் கீழ் பீஜிங்கில் நடைபெறும் பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
அத்துடன், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட பல மூத்த சீன அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.