கிழக்கு பாதுகாப்பு நிலவரங்கள்- சிறிலங்கா இராணுவத் தளபதி ஆராய்வு
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் லசந்த றொட்றிகோ கிழக்கில் படையினரின் படைத் தலைமையகங்களில் ஆய்வு செய்துள்ளார்.
கடந்த 19ஆம், 20ஆம் திகதிகளில் கிழக்குப் படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள பகுதிகளுக்கும், படைத்தளங்களுக்கும் அவர் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, கிழக்கு படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பல்லேகும்புர, 22, 23, மற்றும் 24 வது டிவிசன்களின் கட்டளை அதிகாரிகளைச் சந்தித்து, பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், கிழக்கு படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் 3 வது மற்றும் 7வது இராணுவப் புலனாய்வுப் பிரிவு படையணிகளின் கட்டளை அதிகாரிகளுடன், செயற்பாட்டு நிலவரங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநர், திருகோணமலை ஆயர் ஆகியோரையும் சிறிலங்கா இராணுவத் தளபதி சந்தித்துள்ளார்.