மேலும்

மெக்சிகோ கடத்தல்காரர்களிடம் இருந்து இரு இலங்கையர்கள் மீட்பு

மெக்சிகோவில் கடத்தல்கார்களால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட எட்டுப் பேர், அந்த நாட்டு எல்லையோர காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

கடத்தி தடுத்து வைத்திருந்த இரண்டு இலங்கையர், ஆறு நேபாளிகளை அச்சுறுத்தி, கடத்தல்காரர்கள் தொடர்ச்சியாக கப்பம் பெற்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடத்தி வைக்கப்பட்டிருந்த எட்டுப் பேரும் மெக்சிகோவின் தென்பகுதி நகரான அன்ரிகுவோ மொரெலோஸ் என்ற நகரில் வெள்ளிக்கிழமை பிற்பகல், 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்டவர்கள் எல்லையோர கிராமப் புறம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, விரைந்து சென்ற மெக்சிகோ எல்லைக் காவல்துறையினர் அவர்களை மீட்டுள்ளனர்.

காவல்துறையினர் அங்கு சென்ற போது, வீடு ஒன்றில் இருந்து எட்டு ஆண்கள் உதவி கோரியபடி வெளியே ஓடினர்.

கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்ற தகவலை மெக்சிகோ காவல்துறை வெளியிடவில்லை.

கடத்தல்காரர்கள் தம்மை மூன்று நாட்களாக அந்த வீட்டில் உணவு, குடிநீர் எதுவும் வழங்காமல் தம்மை அடைத்து வைத்து, உறவினர்களிடம் பணம் கோரி வந்தனர் என்று மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க எல்லையைக் கடக்க முயன்ற போதே தாம் கடத்தல்காரர்களிடம் சிக்கியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அவர்களுக்கு உடனடியாக உணவு, குடிநீரை வழங்கிய காவல்துறையினர், Ciudad Mante இல் உள்ள Tamaulipas சட்டமா அதிபர் செயலகத்துக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவ சோதனைகளுக்குப் பின்னர், அதிகாரிகள் இந்த வழக்கை ஆவணப்படுத்தியுள்ளனர்.

சட்டவாளர்களுடனான நேர்காணல்களுக்குப் பிறகு, இவர்கள் மெக்சிகோவில் இருப்பதற்கான சட்டபூர்வமான நிலையை ஆராய்வதற்காக மெக்சிகோவின் தேசிய குடிவரவு நிறுவனம்,  அழைத்துச் சென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *