கொழும்பில் கோத்தா கொடுத்த வாக்குறுதி – ஜெய்சங்கர்
அனைத்து இலங்கையர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அதிபராக தாம் இருப்பதாக, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில், சிறிலங்கா அதிபரின் இந்திய பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மதிமுக பொதுச்செயலர் வைகோ உரையாற்றிய போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
“கோத்தாபய ராஜபக்ச பதவியேற்ற ஒரு நாள் கழித்து நான் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தேன். எமது இருதரப்பு உறவுகள் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்.
இதன்போது, தான் இப்போது அனைத்து இலங்கையர்களுக்கும் அதிபராக இருப்பதாக கோத்தாபய ராஜபக்ச எம்மிடம் உறுதி அளித்தார்.
அந்த வாக்குறுதியை நாங்கள் கவனிக்க வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.