தெகிவளையில் மற்றொரு குண்டு வெடிப்பு – 2 பேர் பலி
கொழும்பு – தெகிவளையில் மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தெகிவளை மிருகக் காட்சி சாலைக்கு முன்புறமாக உள்ள உணவகம் ஒன்றிலேயே இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இதி்ல், 2 பேர் கொல்லப்பட்டனர் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தை அடுத்து, தெகிவளை மிருகக் காட்சி சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர், தெரிவித்துள்ளார்.
இதனிடையே குண்டுவெடிப்பு நடந்த பகுதியில் சந்தேக நபர் ஒருவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.