மேலும்

19 சீன, சிறிலங்கா இணையர்களுக்கு பிரமாண்ட திருமணம்

சீனா மற்றும் சிறிலங்காவைச் சேர்ந்த 19 இணையர்கள் நீர்கொழும்பில் உள்ள ஆடம்பர விடுதியில் வியாழக்கிழமை பெரியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் திருமணம் செய்து கொண்டனர்.

12 சீன இணையர்களும், 7 சிறிலங்கா இணையர்களுக்குமே நேற்று திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இவர்கள் அனைவரும்,  சிறிலங்காவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள சீனாவின் அரச கட்டுமான பொறியியல் நிறுவனத்தின் பணியாளர்களாவர்.

‘அணை மற்றும் பாதை திட்டத்துக்காக ஒன்று கூடியுள்ளோம், நாங்கள்  சிறிலங்காவில் திருமணம் செய்தோம்’ என்ற தொனிப் பொருளில் இந்த பிரமாண்ட திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பில் உள்ள  சீனத் தூதரக அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி பாங் சுன்சூ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் 300 விருந்தினர்கள் இந்த திருமண நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்தப் புதிய திருமணங்கள் மூலம், சீன- சிறிலங்கா ஒத்துழைப்பு எதிர்காலத்தில் பிரகாசமாகவும் செழிப்பாகவும் இருக்கும் என்று நம்புவதாக சீனத் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி சுன்சூ தெரிவித்துள்ளார்.

மணமக்கள் அனைவரும் சீன கலாசார மரபுகளுக்கு அமைய சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *