மேலும்

யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக ஆர்னோல்ட் – மாகாணசபை உறுப்பினர் பதவியை உதறினார்

Arnoldயாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் இம்மானுவல் ஆர்னோல்டை நிறுத்த தமிழ் அரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ். மாநகரசபைத் தேர்தலில் மாநகர முதல்வர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் அரசுக் கட்சிக்குள் பலத்த போட்டி நிலவியிருந்தது.

வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜெயசேகரம், ஆர்னோல்ட், ஊடகவியலாளர் வித்தியாதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ சிறில், மற்றும் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் இராஜகுருதேவன் ஆகியோரை முதன்மை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதன் முடிவிலேயே, வடக்கு மாகாணசபை உறுப்பினர் இம்மானுவல் ஆர்னோல்டை யாழ். மாநகர முதல்வர் பதவிக்கு முன்னிறுத்த தமிழ் அரசுக் கட்சி முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, ஆர்னோல்ட் வட மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை நேற்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கையளித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதனன்றே கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல்

இதற்கிடையே, வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை மறுநாள் புதன்கிழமையே வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளது.

சாவகச்சேரி நகரசபைக்கு ஏற்கனவே வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று தொடக்கம் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

எனினும், நாளை மறுநாளே கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசுக் கட்சியின் முகவர்கள் வேட்புமனுக்களை மாவட்ட செயலகங்களில் தாக்கல் செய்யவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *