மேலும்

பசிலுக்கு எதிராக கூட்டு எதிரணிக் கட்சிகள் போர்க்கொடி – அநீதி இழைப்பதாக மகிந்தவிடம் முறைப்பாடு

mahinda-rajapaksa-basil-rajapaksaஉள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட்டில் பசில் ராஜபக்ச நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாக கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள எட்டு அரசியல் கட்சிகள், மகிந்த ராஜபக்சவிடம் முறையிட்டுள்ளன.

மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாசக் கட்சி, தேச விடுதலை மக்கள் கட்சி ஆகிய எட்டுக் கட்சிகளுமே, பசில் ராஜபக்ச தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளன.

மலர் மொட்டு சின்னத்தைக் கொண்ட, சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு அதிகளவு வேட்புமனுக்களில் அதிகளவு இடங்களை ஒதுக்கி, ஏனைய கட்சிகளுக்கு அநீதி இழைப்பதாக இந்தக் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இதையடுத்து, தமது அணியின் மூத்த தலைவர்களான குமார வெல்கம மற்றும் சி.பி.ரத்னாயக்க ஆகியோரிடம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பை மகிந்த ராஜபக்ச ஒப்படைத்துள்ளார்.

இவர்கள், நேற்று தொடக்கம் வேட்புமனுக்களில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதா என்று மாவட்ட ரீதியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *