மேலும்

முதலமைச்சருடன் அரசியல் பேசுவதை தவிர்த்த இந்தியத் தூதுவர்

cm-colombo-press-1யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போது, அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலகத்தில் இன்று முறபகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதையடுத்து, இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.

அப்போதே, இந்தியத் தூதுவர் அரசியலில் விவகாரங்கள் தொடர்பாகப் எதுவும் பேசவில்லை,  பேசுவதற்கும் அவர் ஆர்வம் காட்டவில்லை என்று குறிப்பிட்டார்.

அதேவேளை வடக்கின் பொருளதார அபிவிருத்திக்கு இந்தியா உதவும் என்று இந்தியத்தூதுவர் தன்னிடம் உறுதி அளித்ததாகவும், பலாலி விமான நிலையம், மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, மன்னார்- இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் முதலமைச்சர் கூறினார்.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கு வடக்கில் இருந்து விண்ணப்பிப்போர் தொகை குறைவாக இருப்பதாகவும், தொழில்வாய்ப்புகள் குறைவாக உள்ள நிலையில் வடக்கில் உள்ளவர்கள் இத்தகைய வாய்ப்புகளைத் தவறவிடுவது குறித்து கவலையளிப்பதாகவும் இந்தியத் தூதுவர் தம்மிடம் கூறியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

வடக்கை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும் இந்தியத் தூதுவர் உறுதியளித்ததாகவும், முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *