மேலும்

10 புதிய மேஜர் ஜெனரல்கள் – இறுதிப்போரில் பங்கேற்றவர்களுக்கும் பதவி உயர்வு

Sri_Lanka_Army_Flagஇராணுவத்தைச் சேர்ந்த பத்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

2017 மார்ச் 30ஆம் நாள் தொடக்கம் ஐந்து  பிரிகேடியர்கள், மேஜர் ஜெனரல்களுக்கு பிரிகேடியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பிரிகேடியர் எச்ஆர்.என்.பெர்னான்டோ, பிரிகேடியர் ஏ.எல்.எஸ்.கே.பெரேரா, பிரிகேடியர் எம்.எம்.எஸ்.பெரேரா, பிரிகேடியர் ஜி.ஐ.எல்.வாதுகே, மற்றும் பிரிகேடியர் அத்துல கொடிப்பிலி ஆகியோருக்கே கடந்த மார்ச் 30 ஆம் நாள் தொடக்கம் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரிகேடியர் ஜி.வி.ரவிப்பிரிய ஏப்ரல் 2ஆம் நாள் தொடக்கமும், பிரிகேடியர் ஜி.ஜே,ஏ.டபிள்யூ.கலகமகே ஏப்ரல் 16ஆம் நாள் தொடக்கமும், பிரிகேடியர் டி.ஏ.ஆர்.ரணவக்க ஏப்ரல் 22ஆம் நாள் தொடக்கமும், பிரிகேடியர் டி.எம்.எஸ்.திசநாயக்க  மே 19ஆம் நாள் தொடக்கமும், பிரிகேடியர் ஏ.எம்.ஆர்.தர்மசிறி ஜூன் 6ஆம் நாள் தொடக்கமும், மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல்கள் பலர் அண்மையில் அடுத்தடுத்து ஓய்வுபெற்றுள்ள நிலையிலேயே, இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பதவி உயர்வு பெற்றுள்ள மேஜர் ஜெனரல்களில் இறுதிக்கட்டப் போரில், களமுனையில் படையணிகளை வழிநடத்திய அதிகாரிகளும் அடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *