மேலும்

சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் – ஒப்பீடு செய்ய இந்திய அமைச்சர் மறுப்பு

GenVK_Singhசிறிலங்காவுக்கு இந்தியா 2.6 பில்லியன் டொலரை  அபிவிருத்திப் பங்களிப்பாக வழங்கியுள்ளது என்று இந்தியாவின் வெளிவிவகார இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் புள்ளிவிபரங்களுடன் பதிலளித்திருந்தார்.

பிராந்தியத்தில் சீனாவின் முதலீடுகளுடன் இந்தியாவின் மூலோபாய முதலீடுகளை ஒப்பீடு செய்யுமாறு  இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மறுப்புத் தெரிவித்த ஜெனரல் வி.கே.சிங், “இந்தியாவின் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் இந்தியாவின் முன்னுரிமைகள் மற்றும் கரிசனைகளை  அடிப்படையாக கொண்டதாகும்.

சிறிலங்காவின் அபிவிருத்திக்காக இந்தியா அளித்துள்ள பங்களிப்பு 2.6 பில்லியன் டொலருக்கு அதிகமாகும். இதில் கொடைகள் 436 மில்லியன் டொலருக்கும் அதிகம்.

கடந்த ஆண்டு சிறிலங்காவுக்கு அளிக்கப்பட்ட அபிவிருத்தி உதவிக்கான நிதியை விட இந்த ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை குறைவாகும்.

2014-15 நிதியாண்டில், சிறிலங்காவுக்கு 499 கோடி ரூபாவையும், 2015-16 நிதியாண்டில் 403 கோடி ரூபாவையும் இந்தியா வழங்கியிருந்தது.

மார்ச் 27ஆம் திகதி வரையான கடந்த நிதியாண்டில், 73 கோடி ரூபாவை மாத்திரமே இந்தியா வழங்கியுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *