மேலும்

சிறிலங்காவில் பொதுமக்களை காப்பாற்றத் தவறிவிட்டது ஐ.நா – மனித உரிமை ஆணையாளர்

?????சிறிலங்காவில் 2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில், பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா நிலைமைகள் தொடர்பாக ஐ.நா பாதுகாப்புச் சபையில் நடந்த கலந்துரையாடலின் போது, காணொளி மூலம் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமையைச் செய்யப் போகிறது என்றால் ஐ.நாவின் நோக்கங்கள் உறுதியானதாகவும், தெளிவானதாகவும், பிளவுகளற்றதாகவும் இருக்க வேண்டும்.

Security Council meeting on The situation in Bosnia and Herzegovina.

2009இல் சிறிலங்காவிலும், இப்போது  சிரியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, சூடான், புரூண்டி, மியான்மாரிலும் கூட, இவ்வாறிருந்திருந்தால், மில்லியன் கணக்கான மக்களின் மகத்தான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *