மேலும்

சிறிலங்காவில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மனிதனின் பற்களின் படிமங்கள் கண்டுபிடிப்பு

Batadomba-lena rockசிறிலங்காவில் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஈர வலயக் காடுகளில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதி மனிதர்களின் பற்களின் எச்சங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அவை 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களுடையவை என்று உறுதிசெய்துள்ளனர்.

இதன் மூலம் ஈரவலயக் காடுகளில் மனிதர்கள் வாழ்ந்ததாக இதற்கு முன்னர் கணிக்கப்பட்ட காலத்துக்கும் முன்னதாகவே, சிறிலங்காவில் உள்ள வெப்பமண்டலக் காடுகளில் மனிதர்கள் வாழ்ந்துள்ளமை உறுதியாகியுள்ளது.

சிறிலங்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்றுடன் இணைந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், பிராட்பார்ட் பல்கலைக்கழகம் என்பன இணைந்து, 26 ஆதிமனிதர்களின் பற்களில் இருந்த காபன் மற்றும் ஐசோரொப்ஸ் என்பவற்றைக் கொண்டு, ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் ஒரு பல் தொகுதி, 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மனிதனுடையது என்றும், இதுவே மிகவும் பழமையானது என்றும், மற்றொன்று 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்றும், கண்டறிந்துள்ளனர்.

அனைத்துப் பற்களிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவை மழைக்காடுகளில் உள்ள உணவுகளைச் சாப்பிட்டதற்கான தடயங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக ஆதிமனிதர்கள் ஈரவலயக் காடுகளில் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் வாதிட்டு வந்தனர்.

ஆனால், அந்தக் கூற்றை நிராகரிக்கும் வகையில், 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிறிலங்காவில் ஈரவலயக்காடுகளில் ஆதி மனிதர்கள் வாழ்ந்த்தற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த 26 ஆதி மனிதர்களின் பற்களும்,சிறிலங்காவில் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *