மகிந்தவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தினுள் தரையில் அமர்ந்து போராட்டம்
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.










