மேலும்

Archives

இளைஞர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பால் உருப்பெற்றதே தமிழ்த் தேசியம் – யதீந்திரா

இன்று பல அரசியல்வாதிகளும் அர்த்தம் விளங்காமல் உச்சரித்துவரும் தமிழ்த் தேசியம் என்பது, இளைஞர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பால் உருப்பெற்ற ஒன்று. இது குறித்து இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளரான அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.

“எங்கள் வாக்கு சிங்கள பௌத்தருக்கே” – தெற்கில் தூண்டப்படும் இனவாதம்

கேகாலை மாவட்டத்தில் இனவாதத்தைத் தூண்டும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்  ஐதேகவின் பொதுச்செயலர் கபீர் காசிம்.

மகிந்தவின் மேடையில் ஏறிய மைத்திரியின் அமைச்சருக்கு நேர்ந்த அவமானம்

மகிந்த ராஜபக்சவின் மேடையில் ஏறிய மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளரான கலை மற்றும் கலாசார அமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்க, அவமானப்பட நேர்ந்துள்ளது.

சிறிலங்காவில் நடக்கும் சுவரொட்டிப் போர்

சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆதரதவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் தினமும் சுவரொட்டி தொடர்பான இழுபறிப் போர் ஒன்று நடந்து வருகிறது.

ஏழு ஆசனங்களையும் தாருங்கள், இறுதித்தீர்வைப் பெற்றுத் தருவோம் – யாழ்ப்பாணத்தில் சம்பந்தன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழு ஆசனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்குங்கள்,  அடுத்த ஆண்டு இறுதிக்குள் நல்லதொரு தீர்வை பெற்று தருவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சம்பந்தன் – முழுமையான தேர்தல் அறிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, மருதனார் மடத்தில் இன்று மாலை நடந்த பரப்புரைக் கூட்டத்தில், வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை இன்று மாலை 5 மணியளவில் வெளியிட்டார்.

திருமலை ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார் வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகை

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. அன்ரனி நோயல் இம்மானுவெல் ஆண்டகையின் திருநிலைப்படுத்தல் நிகழ்வு இன்றுகாலை திருகோணமலையில் இடம்பெற்றது.

வட, கிழக்குத் தமிழர்கள் வாக்குகளை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் – சம்பந்தன் அழைப்பு

தமிழரின் இலட்சியத்தை விரைவில் அடைவதற்கு, அடுத்தமாதம் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் தாயகத்தில் உள்ள  அனைத்துத் தமிழ்மக்களும் தமது வாக்குகளை ஆயுதமாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

மைத்திரியின் அணிவகுப்புக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் ரவை – பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த கடெற் மாணவரின் துப்பாக்கியில், ரவை ஒன்று சிக்கியிருந்ததை, சிறிலங்கா அதிபரின் பாதுகாப்புப் பிரிவினர் கண்டறிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு – ஐதேகவின் தேர்தல் வாக்குறுதி

அனைத்து தரப்பினரின் இணக்கத்துடன், ஒரே நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.