மேலும்

Archives

சிறிலங்கா அமைச்சர்களுடன் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்காக உதவிச்செயலர் சார்ள்ஸ் எச்.றிவ்கின் நேற்று சிறிலங்கா அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

காணாமற்போனோர் பணியக சட்டத்துக்கு எதிராக சிறிலங்கா இராணுவத்தினர் போராட்டம்

காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி, தேசிய போர் வீரர்கள் அமைப்பு, வீரலங்கா பவுண்டேசன் ஆகியவற்றின் தலைமையில் சிறிலங்கா படையினர் நேற்று போராட்டம் ஒன்றை நடத்தினர்.

சம்பந்தனைச் சந்தித்தார் நோர்வே பிரதமர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வே பிரதமர் எர்ணா சொல்பேர்க் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அமெரிக்க, சிறிலங்கா படைகளுக்கிடையில் முதல்முறையாக பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல்

சிறிலங்கா- அமெரிக்க ஆயுதப்படைகளுக்கு இடையில் முதலாவது செயல்மட்ட இருதரப்பு பாதுகாப்புக் கலந்துரையாடல், கடந்த திங்கட்கிழமை தொடக்கம் இரண்டு நாட்கள் கொழும்பில் நடத்தப்பட்டது.

கொழும்பு வந்தார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்காக உதவிச் செயலர் சார்ள்ஸ் எச்.றிவ்கின் இரண்டு நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டி- மொங்கோலிய வீரரிடம் துளசி தருமலிங்கம் தோல்வி

றியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், நேற்று நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் கட்டார் நாட்டு அணியின் சார்பில் பங்கேற்ற, ஈழத் தமிழரான துளசி தருமலிங்கம், மொங்கோலிய நாட்டு வீரரிடம் தோல்வியடைந்தார்.

எங்கள் நிலத்தை சிறிலங்கா கடற்படை கொள்ளையிடக் கூடாது – முல்லைத்தீவு மக்கள்

வட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் நிரந்தரமாகக் கையகப்படுத்தப்படத் திட்டமிடப்பட்ட நிலப்பகுதியை அளவீடு செய்து அவற்றின் எல்லைகளைக் குறிப்பதற்காகச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் கடந்த வாரம், கிராம மக்களால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

காஷ்மீர் கலவரங்கள் குறித்து சிறிலங்கா அதிபரிடம் முறையிட்ட பாகிஸ்தான் தளபதி

இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் தற்போது நடந்து வரும் கலவரங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான் விளக்கமளித்துள்ளார்.

கொழும்பில் முக்கிய பேச்சுக்களில் பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி

இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான், நேற்று சிறிலங்கா பிரதமர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

78 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 தமிழ் அரசியல் கைதிகள், நேற்றுக்காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.