தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்த தமிழ் தேசிய பேரவை
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.
சிறிலங்காவுக்கான கனடிய தூதுவர் இசபெல் கத்தரின் மார்ட்டின், அனைத்து குடிமக்களுக்கும் உள்ளடக்கம் மற்றும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக அதிகாரபூர்வ மொழிக் கொள்கைகளை திறம்பட செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், பேரிடர் சவால்களை சமாளிக்க சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், சீனா முழு ஆதரவை வழங்கும் என அறிவித்துள்ளது.
சீனாவின், தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் (Wang Dongming) மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று சிறிலங்காவுக்கு வந்துள்ளார்.
இந்திய கடலோர காவல்படை கப்பலான ‘சௌர்யா’ மனிதாபிமான உதவிப் பொருள்களுடன் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளது.
பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவில் ஒப்பரேசன் சாகர் பந்துவை முடித்துக் கொண்டு, இந்திய விமானப்படையின் நைட்ஸ் உலங்குவானூர்திப் பிரிவு திருவனந்தபுரத்திற்குத் திரும்பியுள்ளது.
டிட்வா புயலை அடுத்து ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வந்திருந்த இந்திய இராணுவத்தின் மருத்துவக் குழுவினர் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.
டிட்வா புயலை அடுத்து பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக சிறிலங்கா வந்த அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த (INDOPACOM) படையினர் தங்கள் மனிதாபிமான உதவிப் பணியை முடித்துக் கொண்டு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் நடத்திய பேச்சுக்களில், அரச தரப்பு பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றிருந்த ராஜன் ஆசீர்வாதம் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.