மேலும்

Tag Archives: வவுனியா

20 ஆசனங்களைக் குறிவைக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று நம்புவதாக, கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு குறித்து நாளை இறுதி முடிவு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு குறித்து, நாளை வவுனியாவில் நடைபெறவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

சிறிலங்காவில் இன்புளூவென்சா வைரசுக்கு இதுவரை 32 பேர் பலி – வடக்கிற்கும் பரவியது

சிறிலங்காவில் பரவி வரும் இன்புளூவென்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாகவும், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓமந்தையில் 14வயதுச் சிறுமி மர்ம மரணம் – வடக்கில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் 14 வயதுச் சிறுமி ஒருவர் நேற்று மர்மமான நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓமந்தை அருகே உள்ள வேலர் சின்னக்குளத்தில், வீட்டில் தனித்திருந்த இந்தச் சிறுமி, நேற்றுமாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அச்சத்தினால் புங்குடுதீவை விட்டு வெளியேறுகிறது வித்தியாவின் குடும்பம்

கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனின் குடும்பத்தினர், பாதுகாப்புக் காரணங்களுக்காக, புங்குடுதீவை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வவுனியாவில் முன்னாள் ரெலோ உறுப்பினர் சுட்டுக்கொலை

வவுனியா – மகாரம்பைக் குளத்தில் ரெலோ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வடிவேலழகன் என்ற 45 வயதுடைய நபரே படுகொலை செய்யப்பட்டவராவார்.

உயர்பாதுகாப்பு வலய மீள்குடியமர்வு பிரச்சினையை தீர்க்க சிறப்புக் குழு – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள, சிறிலங்கா படையினர் நிலைகொண்டுள்ள காணிகளில், இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாக குழுவொன்றை அமைத்து, உரிய தீர்வு காணப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

வவுனியாவிலும் வாக்களிப்பு நிலையம் அருகே கைக்குண்டு தாக்குதல்

வவுனியாவிலும் வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்கு அருகே இன்று பிற்பகல் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 ஆண்டுகளுக்கு முன் போராளியாக இருந்தவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் விடுலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவரை, புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று கூறி சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவினர் பிடித்துச் சென்றுள்ளனர்.

சண் மாஸ்டர் இந்தியாவுக்குத் தப்பிவிட்டாராம்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைகளுக்கு சாட்சியப் படிவங்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.