மேலும்

Tag Archives: யதீந்திரா

புலம்பெயர் சமூகம் கிழக்கில் கூடுதல் கரிசனையை செலுத்தி வருகிறது- அரசியல் ஆய்வாளர் யதீந்திரா

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பல்வேறு விடயங்களிலும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரே நேரத்தில் இரண்டு சமூகங்களுடன் போட்டிபோட வேண்டிய நிலையிலிருக்கின்றனர். இந்த விடயங்களை கருத்தில் கொண்டே எமது புலம்பெயர் சமூகம் கிழக்கு மாகாணத்தில் கூடுதல் கரிசனையை வெளிப்படுத்தி வருகிறது.

திருகோணமலையில் நடந்த கி.பி.அரவிந்தன் பற்றிய ‘சொல் யாராக இருக்கலாம் நான்’ நூல் அறிமுகம்

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும் கவிஞருமான, கி.பி.அரவிந்தன் அவர்கள் பற்றி, பாலசுகுமாரால் தொகுக்கப்பட்ட ‘சொல் யாராக இருக்கலாம் நான்’ நூல் அறிமுக நிகழ்வு நேற்று மாலை திருகோணமலையில் இடம்பெற்றது. 

மகிந்த பிரதமரானால் சிறிலங்காவின் நிலைமைகள் சிக்கலடையும் – யதீந்திரா

மகிந்த ராஜபக்ச பிரதமரானால் சிறிலங்காவின் அரசியல் நிலைமைகள் நிச்சயம் சிக்கலடையும். அதனைக் கருத்தில் கொண்டு தான் தமிழ்மக்கள்  செயலாற்ற வேண்டியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக, திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும், அரசியல் ஆய்வாளரான யதீந்திரா தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பால் உருப்பெற்றதே தமிழ்த் தேசியம் – யதீந்திரா

இன்று பல அரசியல்வாதிகளும் அர்த்தம் விளங்காமல் உச்சரித்துவரும் தமிழ்த் தேசியம் என்பது, இளைஞர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பால் உருப்பெற்ற ஒன்று. இது குறித்து இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளரான அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.