வடக்கில் வெள்ளத்தினால் 72 ஆயிரம் பேர் பாதிப்பு
வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இடர் முகாமைத்துவ நிலையம் இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இடர் முகாமைத்துவ நிலையம் இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளது.
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால், 14 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், வெள்ளத்தில் சிக்கியிருந்த பலர் சிறிலங்கா கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவு தொடக்கம், கொட்டிய பெருமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தினால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கொட்டிய கடும் மழையினால், குளங்கள் நிரம்பி, வெள்ளநீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இதனால், பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
தமிழ்நாட்டின் விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார்.
முல்லைத்தீவு – அலம்பில், நித்திகைக்குளம் பகுதியில், சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட ஆறு விவசாயிகளை சிறிலங்கா விமானப்படையினர், இன்று உலங்குவானூர்தி மூலம் மீட்டனர்.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் கொடி மற்றும், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக- சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேர் நேற்று முல்லைத்தீவு நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டனர்.
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை, எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் நாளுக்கு முன்னர் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்த தியாகதீபம் திலீபனின், 31ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.